இலங்கை

இலங்கையில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மற்றுமோர் சலுகை!

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமாறு பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைய, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 20 கிலோகிராம் அரிசி வழங்குவதற்கு அமைச்சரவை அண்மையில் அங்கீகாரம் வழங்கியது.

சம்பந்தப்பட்ட அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு அமைய தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கான அரிசிப் பொதிகள் விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் மேற்கொள்ளப்படும் என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

அஸ்வெசும பயனாளிகள், நலன்புரி திட்டத்திற்காக மேன்முறையீடு செய்த மக்களில் நலன்புரி நன்மைகள் சபையால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலம் பயன்பெறாத சமுர்த்தி பயனாளிகள், அஸ்வெசும அல்லது சமுர்த்தி நலன்புரிகள் கிடைக்காத மேலதிக நிதியுதவிகள் பெறும் முதியோர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் நாள்பட்ட நோயுற்றோர்களுக்காக இந்த அரிசி மூடைகள் வழங்கப்படவுள்ளன.

இதற்குத் தேவையான 54,800 மெட்ரிக் டொன் அரிசியை விநியோகஸ்தர்களிடம் இருந்து மாவட்டச் செயலாளர்கள் கொள்முதல் செய்ய வேண்டும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் திறைசேரியால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்