ஐரோப்பா

ஜெர்மனியில் கோர விபத்தில் 18 வயதுடைய யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

ஜெர்மனி நாட்டில் பாரிய வாகன விபத்து நிகழ்ந்துள்ள நிலையில், இந்த விபத்தில் யுவதி ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

30ஆம் திகதியன்று ஜெர்மனியின் அதிவேக போக்குவரத்து பாதை ஆ 43 இல் கோர விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது 18 வயதுடைய ஒரு பெண்ணானவர் வாகன சாரதி அனுமதி பத்திரத்தை உரிய காலத்தில் பெற்று கொண்டுள்ளார்.

இதேவேளையில் குறித்த பெண் வாகனத்தை ஓட்டும் போது தனது வாகனத்தால் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த விபத்தின் போது 18 வயதுடைய யுவதி சம்பவ இடத்தில் பலியாகியுள்ளார்.

இந்நிலையில் அதிவேக போக்குவரத்தில் வந்த மற்றைய வாகனம் இவருடைய வாகனத்தில் மோதியதினால் பாரிய விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 16 பேர் வரை காயப்பட்டுள்ளதாகவும் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தொரியவந்துள்ளது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்