உலகம் செய்தி

ரஷ்யாவில் அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம் – உன்னிப்பாக கண்காணிக்கும் அமெரிக்கா

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரஷ்யாவில் தரையிறங்கிய ஏர் இந்தியா பயணிகள் விமானத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று புறப்பட்ட குறித்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக ரஷ்யாவில் திடீரென தரையிறங்கியது.

அந்த விமானத்தில் 216 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் அமெரிக்கர்கள் என்றும் கூறப்படுகிறது.

விமானத்தில் உள்ள அமெரிக்கர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், ரஷ்யாவில் விமானம் தரையிறங்குவது மற்றும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை துணை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி