உலகம்

அமெரிக்க குடிமக்களுக்கு தடை விதித்த ஆப்பிரிக்க நாடுகள்!

அமெரிக்க குடிமக்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடுகள் தடை செய்துள்ளன.

மாலி மற்றும் புர்கினோ பசோ ஆகிய நாடிகளின்  குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இவ்விரு நாடுகளும் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளன.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் தனித்தனி அறிக்கைகளின் மூலம் இது தொடர்பில் அறிவித்துள்ளன.

பரஸ்பரம் என்ற கொள்கையின்படி, மாலி குடியரசின் அரசாங்கம் மாலி குடிமக்கள் மீது விதிக்கப்படும் அதே நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளை அமெரிக்க குடிமக்களுக்கும் விதிப்பதாக அறிவித்துள்ளது.

புர்கினா பாசோவின் வெளியுறவு அமைச்சர் கரமோகோ ஜீன்-மேரி ட்ரேரே கையெழுத்திட்ட மற்றொரு அறிக்கையில், அமெரிக்க குடிமக்கள் புர்கினா பாசோவிற்குள் நுழைவதற்கான தடைக்கு அமெரிக்கா முன்வைத்துள்ள காரணத்தையே சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்