ஐரோப்பா

உக்ரேன் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகர் ஸ்பெயினில் சுட்டு கொலை

உக்ரைனின் முன்னாள் அதிபர் விக்டர் யானுகோவிச்சின் ஆலோசகராக செயல்பட்டு வந்தவர் ஆண்ட்ரி போர்ட்னோவ். கடந்த 2010 முதல் 2014 வரை உக்ரைன் அதிபர் அலுவலகத்தின் துணைத் தலைவராக பணியாற்றிய இவர், விக்டர் யானுகோவிச்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்தார்.

விக்டர் யானுகோவிச் ஆட்சிக் காலத்தின்போது பெரும்பாலும் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஆண்ட்ரி போர்ட்னோவ் பின்பற்றி வந்தார். மேலும் உக்ரைனில் 2014-ம் ஆண்டு நடந்த மாபெரும் புரட்சியில் பங்கேற்ற போராட்டக்காரர்களுக்கு எதிரான சட்டங்களை இயற்றியதில் ஆண்ட்ரி போர்ட்னோவ் முக்கிய பங்காற்றினார்.

இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட்டில் உள்ள ஒரு பள்ளிக்கு வெளியே ஆண்ட்ரி போர்ட்னோவ் இன்று காலை 9.15 மணியளவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த தகவலை ஸ்பெயின் உள்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்