இலங்கை

அமெரிக்காவுடனான கடன் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அதானி குழுமம் : கொழும்பு துறைமுகத்திற்கு பாதிப்பா?

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை மேம்படுத்துவதற்காக அமெரிக்காவுடனான 553 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

இதன் பின்னணியில்தான் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் துறை லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.

இருப்பினும், மேற்கு முனையத்தின் வளர்ச்சியை அதானி குழுமம் அதன் உள் மூலதன கையிருப்பைப் பயன்படுத்தி மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்திற்காக அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிதி நிறுவனம் எதிர்பார்த்திருந்த 553 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் ஒப்பந்தம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அதானி துறைமுகங்கள் மற்றும் விசேட பொருளாதார வலயங்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மேற்கு சர்வதேச முனையத் திட்டத்திற்காக அதானி குழுமம் அதன் உள் மூலதன இருப்புக்களை பயன்படுத்தப் போவதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தை அபிவிருத்தி செய்வதற்காக நிறுவப்பட்ட நிறுவனத்தின் பெரும்பகுதி அதானி குழுமத்திற்கு சொந்தமானது.

இந்த திட்டத்திற்கு நிதியுதவி அளிக்க அமெரிக்கா கடந்த ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

ஆனால் அதானி குழுமத்தின் நிறுவனர் கவுதம் அதானி மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் துறை லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ததால், அதற்கான நிதி உதவி கிடைப்பதில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டது.

இத்தகைய பின்னணியில், உரிய கடன் ஒப்பந்தத்தில் இருந்து அதானி குழுமம் விலகியுள்ளது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்