ஐரோப்பா

உக்ரைனின் அதிரடி நடவடிக்கை : ரஷ்யாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள்!

உக்ரைன் இன்று (10.11) மேற்கொண்ட ஆளில்லா விமானத் தாக்குதல் காரணமாக ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள மூன்று விமான நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் மோதல்கள் தொடங்கிய பின்னர் உக்ரைன் மேற்கொண்ட மிகப்பெரிய ஆளில்லா விமான தாக்குதல் இதுவாகும் என வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

32 ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது, அவற்றை சுட்டு வீழ்த்த ரஷ்ய பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, மாஸ்கோவின் ஆபத்தான பகுதிகளில் அமைந்துள்ள 03 விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

எவ்வாறாயினும், ட்ரோன் தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்