ஆசியா

மேற்கு நேபாளத்தில் செங்குத்தாக விழுந்த வேன் : 08 பேர் பலி!

மேற்கு நேபாளத்தில் இன்று (15.11) அதிகாலை ஒரு பயணிகள் வேன் மலைப்பாதையில் இருந்து விலகி விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் காத்மாண்டுவிற்கு மேற்கே 600 கிலோமீட்டர்கள் (375 மைல்) தொலைவில் உள்ள ஷைலேஷிகர் கிராமத்திற்கு அருகே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

அந்த வேன், அருகில் உள்ள ஊரில் திருவிழாவுக்கு சென்ற நிலையில் மீண்டும் நேபாளத்திற்கு திரும்பிக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

காயமடைந்த 4 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை என்பதுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்