இலங்கை

கொழும்பை உலுக்கிய மாணவியின் மரணம் – அடுத்தடுத்து உயிரிழந்த நண்பர்கள் தொடர்பில் பகீர் தகவல்

மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து 03 ஆவது மாடிக்கு குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று மாலை உயிரிழந்தவர் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவி என பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் குறித்த பாடசாலை மாணவி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் 11 ஆம் தரத்தில் படித்து வருவதும், பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து உயிரிழந்த பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழியான இவர், குறித்த சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சடலம் திடீர் மரண பரிசோதனை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்