இலங்கை

மட்டக்களப்பில் விஷப்பாம்பு தீண்டியதால் ஆறு மாத குழந்தை பலி!

ஆறு மாத குழந்தை ஒன்றை விஷப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு ஆரையம்பதி பற்றிமாபுரத்தில் இடம்பெற்றிருக்கிறது.

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை நேற்று அதிகாலை பாம்பு தீண்டி இருக்கிறது. ஆனால் தாயோ நேற்று காலை மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு குழந்தை இறந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத வயதை கொண்ட ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் மரணத்தை தழுவியுள்ளது

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு பிடித்த வீட்டினுள் நுழைந்து குழந்தையை கொண்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.குழந்தையை தீண்டிய பாம்பினை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதையும் அவதானிக்க முடிகின்றது.

பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக் கொண்டிருந்த ஆறு மாதங்களேயான மேற்படி குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது காத்தான்குடி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்