இலங்கை செய்தி

யாழில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்குச் சாவடியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்றைய தினம் உயிரிழந்தார்.

தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் சைவத் தமிழ் வித்தியாசாலையில் பாராளுமன்ற தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பொலிஸ் உத்தியோகத்தரே சுகவீனம் காரணமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் வேறொரு பொலிஸ் உத்தியோகத்தரை நியமித்து பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை