இலங்கை

யாழ் நகரில் பெருமளவான மாவா போதைபொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாண நகரில் பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர்
இன்று கைது செய்யப்பட்டார்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு குறித்த சந்தேக நபர் போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணப் பிராந்திய குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

யாழ்ப்பாணம் பெருமாள் கோயிலடியில் உள்ள தனியார் கல்வி நிறுவனமொன்றின் அருகிலேயே 33 வயதான குறித்த சந்தேக நபர் மாவா போதைப் பொருளை விற்பனைக்காக வைத்திருந்தபோது கைதுசெய்யப்பட்டார்.இதன்போது 3 கிலோ 686 கிராம் நிறை கொண்ட மாவா போதைப் பொருள் சிறிய சிறிய பைகளில் பொதி செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது.

சந்தேக நபர் விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்