இலங்கை செய்தி

உமா ஓயா திட்டத்தால் பாதிப்பா? எல்ல பகுதியில் மண் சரிவு

எல்ல கரந்தகொல்ல பத்து தூண் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

உமா ஓயா நீர்த்தேக்க சுரங்கப்பாதையில் நீர் நிரப்பப்பட்டதன் மூலம் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்த இடத்தில் இருந்து இதுவரை எட்டு வீடுகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் வண்டல் மண் கூடக் காணப்படுகிறது.

எவ்வாறாயினும், உமா ஓயா திட்டத்தினால் இந்த நிலைமையில் எவ்வித பாதிப்பும் இல்லை என நாம் கேட்டபோது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பிரதேசத்தில் சில காலமாக மண்சரிவு அபாயம் காணப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை காரணமாக எல்ல வெல்லவாய வீதியும் பாதிக்கப்படக் கூடும் என்பதால், சாரதிகள் இது தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை