ஐரோப்பா

பிரித்தானியாவில் உள்ள வீடொன்றில் தீவிபத்து : இரு பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு!

பிரித்தானியாவின் வோல்வர்ஹம்ப்டனில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க இரு பெண்களே சம்பவத்தில் பலியானதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் ஆபத்தான நிலையில் மற்றுமொரு பெண் உள்ளிட்ட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் 19 மற்றும் 20 வயதுடைய இரு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. தொடர்ந்து அதிகாரிகள் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்