இலங்கை செய்தி

நுவரெலியாவில் மனைவியுடன் உல்லாசத்தில் இருந்த போது சிக்கிய ஆபத்தான நபர்

நுவரெலியாவில் மனைவியுடன் பதுங்கியிருந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் நேற்று நடத்திய திடீர் சோதனையின் போது நந்தசேன எனப்படும் டொன் நந்தசேன என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நந்தசேன தனது இரண்டாவது மனைவியுடன் நுவரெலியாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பதுங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிபத்கொட மற்றும் கட்டுநாயக்க பிரதேசங்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் 10 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் 15 கோடி ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருளின் உரிமையாளரான நந்தசேனவே கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை மற்றும் கணேமுல்ல பிரதேசத்தில் அவருக்குச் சொந்தமான இரண்டு பாரிய வீடுகள் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை