இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய பெண் கைது!

பொலிஸ் உத்தியோகத்தரை தகாத வார்த்தையில் திட்டி பெண் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பெண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறை தெவிநுவர மணிக்கூண்டுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று தனது வாகனத்தின் பாதையை இடையூறு செய்ததாக தெரிவித்து குறித்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார்.

பின்னர் குறித்த அதிகாரிகள் வழங்கிய அறிவித்தலின் படி, குறித்த பெண் பயணித்த சொகுசு ஜீப்பை கந்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பொலிஸ் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

அதன்போது, ​​குறித்த சந்தேக நபரான பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன், குறித்த அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர், சந்தேகநபரான பெண்ணை கந்தர பொலிசார் கைது செய்ததுடன், குறித்த ஜீப் வண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

குறித்த பெண் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்