யாழ் – கல்லுண்டாய் பகுதி விபத்து தொடர்பில் வெளியான தகவல்!
யாழ்ப்பாணம் கல்லுண்டாய் பகுதியில் நடைபெற்ற விபத்தில் வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பான செய்திகள் என தெரியவந்துள்ளது.
“யாழ்ப்பாணம் கல்லூண்டாய் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வைத்தியரும் மற்றுமொருவரும் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சில இணையத்தள ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்நிலையில், குறித்த செய்தி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் , யாழ்.போதனா வைத்தியசாலை உள்ளிட்ட தரப்பினரிடம் கேட்ட போது , அவ்வாறான விபத்து சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செய்தியினை எவரேனும் உள்நோக்கம் கருதி வெளியிட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
(Visited 5 times, 1 visits today)