இலங்கை செய்தி

எத் தடைகள் வந்தாலும் உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் – ரவிகரன்

எத் தடைகள் வந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

இன்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடையுத்தரவை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,

மேலும் கொடிகளை அகற்றுமாறும்,அலங்கார வேலைகள் இருக்க கூடாதென்றும், பாடல்கள் ஒலிபரப்பக்கூடாது என விரட்டியதாக எனக்கு தகவல் தெரிவித்திருந்தார்கள்.

இதேபோல் தேவிபுரம், முள்ளிவாய்க்கால், அளம்பில், முள்ளியவளை போன்ற பல்வேறு பகுதிகளிலிருந்தும் இவ்வாறான இடம்பெற்றிருந்ததாக அறியத்தந்திருந்தார்கள். இருப்பினும் மக்கள் சில விடயங்களை கதைத்து முடிவு எடுத்திருக்கின்றார்கள்.

அளம்பில் துயிலும் இல்லத்தில் வைத்து எனக்குரிய தடையுத்தரவை வழங்கியிருக்கிறார்கள். எவ்வளவு தடைகள், உத்தரவுகளை தந்தாலும் நவம்பர் 27 உறவுகள் இறந்த நாளினை நினைவுகூர்ந்து நடத்துவோம்.

மஞ்சள் , சிவப்பு கொடி என்பது விடுதலைப்புலிகளது கொடி அல்ல. நிதிமன்ற கட்டளைகளை மதிக்கின்றோம். அக்கட்டளைகளை மதித்து நாம் உறவுகளை நினைவு கூருவோம் என்றார்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை