இலங்கை

அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையத்தில் பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல்!

பெண் கிராம உத்தியோகத்தர் ஒருவர் அழகு சாதனப்பொருள் விற்பனை நிலையம் ஒன்றில் களவெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தியோகத்தர் களவெடுத்த சம்பவம் அங்கிருந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ளது.

விற்பனை நிலையத்திற்கு வருகை தந்த குறித்த பெண் கிராம உத்தியோகத்தர் அங்குமிங்கும் பார்த்த பின்னர் தாம் அணிந்திருந்த ஜேர்சியை ஓரிடத்தில் கழற்றிவைக்கின்றார்.அதன் பின்னர் ஜேர்சியையும் தனது கைப்பையையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்த ஏதோ ஒரு பொருளை தனது ஜேர்சிக்குள் மறைத்து வைத்துக்கொள்கின்றார்.

பெண் கிராம உத்தியோகத்தரின் மோசமான செயல்; காட்டிக்கொடுத்த சீசீரிவி! | Misdemeanor Of Female Village Officer Viral Video

அத்துடன் , அங்கிருந்த ஒரு சோடி காலணியையும் திருடிக்கொண்டு அங்கிருந்து செல்ல முயற்சிக்கின்றார். பெண் கிராம உத்தியோகத்தர் பொருட்களை திருடும் காணொளி விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த CCTV காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள நிலையில், மக்களுக்கு சேவை செய்யும் அரச ஊழியர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளமை குறித்து விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!