இலங்கை

எக்ஸ்பிரஸ் கப்பல் விவகாரம் : கரூவூலத்திற்கு கிடைத்த தொகை!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலால் ஏற்பட்ட சேதம் தொடர்பான இடைக்கால கொடுப்பனவாக கருவூலத்திற்கு 890,000 அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக 16 மில்லியன் ரூபாவும் திறைசேரிக்கு கிடைத்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொகை மீனவர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாகவும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீவிபத்தினால் கடற்பகுதிக்கு ஏற்பட்ட சேதத்தை நிவர்த்தி செய்வதற்காக  கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபைக்கு  வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, எதிர்வரும் சில வருடங்களில் இந்நாட்டில் வெளிநாட்டுக் கடன் வீதத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்