பொழுதுபோக்கு

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அந்த நாள் அறிவிக்கப்பட்டது…

பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்ட விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் ரிலிஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’.

விக்ரம் உளவு அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தில் ஹாலிவுட்டுக்கு நிகரான ஆக்சன் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

photo

கடந்த சில ஆண்டுகளாக வெளியாகாமல் இருக்கும் இந்தப் படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், விநாயகன், திவ்யதர்ஷினி, முன்னா சைமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி படம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 3 times, 1 visits today)
See also  ரஜினிகாந்த் உடல் நலம் குறித்து மருத்துவர்கள் வெளியிட்ட அப்டேட்
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content