பொழுதுபோக்கு

“சுந்தரி 2” இல் புதிய ஹீரோ யார் தெரியுமா??

சுந்தரி சீரியலின் இரண்டாவது சீசனில், ஹீரோவாக நடிக்கும், புதிய ஹீரோ யார் என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

சன் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியல் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், இந்த சீரியலின் இரண்டாம் பாகம் துவங்க உள்ளது.

சுமார் 800 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அனுவுக்கு குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது மட்டும் இன்றி, கார்த்திக் பற்றிய உண்மையும் அனுவுக்கு தெரிந்து விட்டது.

அதே போல் சுந்தரியும், தான் ஆசை பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவியை ஏற்க உள்ளார். இந்த வாரத்துடன் இந்த சீரியல் முடிவுக்கு வரும் என கூறப்படும் நிலையில், இந்த தொடரின் இரண்டாம் பாகத்தின் பணிகள் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

இரண்டாம் பாகத்திலும் கேப்ரியல்லா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகர் கிருஷ்ணா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் சன் டிவி-யில் ஒளிபரப்பான ‘தெய்வத்திருமகள்’, ‘தாலாட்டு’ போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர்.

தொடர்ந்து தரமான சீரியல்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் கிஷ்ணா இந்த சீரியலில் நடிக்க உள்ளதால், சுந்தரி சீசன் 2 தொடரும் கண்டிப்பாக வித்தியாசமான கதைக்களம் கொண்ட தொடராக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் சீசன் 2 குறித்த அறிவிப்பு வெளியாகும் வரை கார்த்திருப்போம்

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்