10 வயதில் காதலனை கரம்பிடித்த சிறுமி! இறுதியில் நேர்ந்த சோகம்
10 வயது சிறுமி எம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் முறையான சடங்குகளுடன் திருமணம் செய்துகொண்டுள்ளார்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வால்நட் கோவ் பகுதியில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
அலினா மற்றும் அரோன் எட்வர்ட்ஸின் மகள் எம்மா எட்வர்ட்ஸ் லிம்போபிளாஸ்டிக் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்
எம்மாவிற்க்கு சிகிச்சை வழங்கப்பட்ட போதும் அவள் குணமடைவதற்கான அறிகுறி சீராக இல்லை.
தங்கள் மகளின் புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தபோது எம்மாவின் பெற்றோருக்கு அதிர்ச்சி அடைத்தனர்.
சோகத்தில் மூழ்கிய எம்மாவின் பெற்றோர் தங்கள் மகளின் கடைசி நாட்களில் உலகில் உள்ள அனைத்து மகிழ்ச்சியையும் கொடுக்க முடிவு செய்தனர்.
இதனால் பெற்றோர் சிறுமியின் கடைசி ஆசையை கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த சிறுமி, தான் சிறுவயதில் இருந்து காதலித்து வரும் டேனியல் மார்ஷலை திருமணம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மகளின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த பெற்றோர் டேனியல் மார்ஷலின் பெற்றோரிடம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
கடந்த ஜூன் 29ஆம் திகதி நடைபெற்ற இத்திருமண விழாவில் இருவீட்டாரும் கலந்து கொண்டுள்ளனர்.
இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.
இந்தநிலையில் திருமணம் நடைபெற்ற 12 நாட்களில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.