தமிழினத்தை சீண்ட வேண்டாம் – செல்வம் அடைக்கலநாதன் எச்சரிக்கை!
சரத் வீரசேகர இனவாதம் கக்குவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்ற (21) இடம்பெற்ற வங்கித்தொழில் விசேட ஏற்பாடுகள் சட்ட மூல விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது தொடர்ந்த பேசிய அவர், சரத் வீரசேகர அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த இடமளிக்க போவதில்லை என்கிறார்.
அதே போல் சமஸ்டியை வழங்க முடியாது என்கின்றார். குருந்தூர் மலையில் தமிழர் வழிபாடுகளை நடத்த முடியாது என்கின்றார்.
இவ்வாறு சொல்வதற்கு இவர் யார்?எந்த அடிப்படையில் இவர் இவ்வாறு பேசுகின்றார் ? இருக்கு ஆதரவாக இருப்போர் யார்? இவரின் கருத்துக்கள் அரசியல் சாசனத்தையும்இஅரசியமைப்பையும் எதிர்ப்பவையாகவே உள்ளன.
இப்போது பார்த்தால் கனடா உயர்ஸ்தானிகரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்கின்றார். அமெரிக்க தூதுவரை மிக மோசமாக சாடுகின்றார்.
சரத் வீரசேகர மிக மோசமாக நடந்து கொண்டுள்ளார். தமிழினத்தை சீண்ட வேண்டாமென சரத் வீரசேகரவை எச்சரிக்கின்றோம்” எனத் தெரிவித்தார்.