ஐரோப்பா

பெண் எம்பி செய்த செயலால் கொசோவோ நாடாளுமன்றத்தில் வெடித்த மோதல்!(வீடியோ)

தென் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கொசோவோ நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொசோவோ நாட்டின் நாடாளுமன்றத்தில் வழக்கம் போல் அவை நடவடிக்கைகளின் போது, அந்த நாட்டு பிரதமர் அல்பின் குர்தி உரையாற்றி கொண்டு இருந்தார்.அப்போது எதிர்க்கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் பிரதமரின் கேலியான உருவப்படத்தை மேடை முன்பு வைத்தார்.

அந்த புகைப்படத்தை துணை பிரதமர் அகற்றிய போது, ஆத்திரம் அடைந்த மற்றொரு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குவளையில் இருந்த தண்ணீரை பிரதமர் மீது ஊற்றினார்.

இதன் காரணமாக ஏற்பட்ட மோதல் கைகலப்பாக மாறியது. அதேவேளை கொசோவோ நாட்டின் நாடாளுமன்றம் அடிதடிக்கு பெயர் போன அவைகளில் ஒன்றாகும்.

அந்தவகையில் கடந்த 2018ம் ஆண்டு புதிய எல்லை உடன்பாடு குறித்த மசோதா மீதான விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான கொசோவோ ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எம்பிக்களே கண்ணீர் புகைக்குண்டுகளை கொண்டு வந்து நாடாளுமன்றில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்