ஐரோப்பா

ஜெர்மனியில் பரபரப்பை ஏற்படுத்திய நபருக்கு நேர்ந்த கதி

ஜெர்மனியில் முல்கைம் நகரத்தில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்து இருக்கின்றது.

25ஆம் திகதி முல்கைம் என்று சொல்லப்படுகின்ற நகரத்தில் பொலிஸார் ஒரு நபர் மீது துப்பாக்கி சூட்டை சரமாரியாக நடத்தியதாக தெரியவந்துள்ளது.

அதாவது இந்த நபரானவர் கத்தியையும் மற்றும் உடைந்த போத்தில் ஒன்றையும் வைத்து இருந்ததாக பொது மக்கள் பொலிஸ் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்த பொழுது குறித்த நபர் பொலிஸார் மீது கத்தி குத்து தாக்குதலை மேற்கொள்ள முனைந்துள்ளார்.

இதன் அடிப்படையில் பொலிஸார் நிலமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு இவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாக தெரியவந்துள்ளது.

துப்பாக்கி தாக்குதலுக்குள்ளான நபர் தற்பொழுது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்திருக்கின்றது.

இதேவேளையில் பொலிஸாருடைய இந்த நடவடிக்கை சம்பந்தமான் விசாரணையை போவன் நகர பொலிஸார் மேற்கொள்ளவதாக தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் கடமையில் ஈடுப்பட்டிருந்த முல்கைம் பொலிஸார் வெப் கெமரா என்று சொல்லப்படுகின்ற ஒரு ஒளி காட்சியை தம்முடன் வைத்துள்ளமை தெரியவந்துள்ளது

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!