பிரான்ஸில் 2 வயதில் பாடசாலை – ஜனாதிபதியின் அதிரடி திட்டம்
பிரான்ஸில் பாடசாலை படிப்பினை 2 வயது முதல் ஆரம்பிக்கும் புதிய திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார்.
மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக Marseille நகருக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு வைத்தே இதனை அறிவித்தார்.
ஆரம்ப பாடசாலை (l’école maternelle) கல்வியை விருப்பப்பட்டால் இரண்டு வயது முதலே ஆரம்பிக்க முடியும் எனவும், 2027 ஆம் ஆண்டில் இருந்து அதற்குரிய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தி தரமுடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
முதற்கட்டமாக நெருக்கமாக சனத்தொகை கொண்ட நகரங்களில் இந்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
(Visited 13 times, 1 visits today)