செய்தி

நுவரெலியாவில் மண்மேடு சரிந்து வீழ்ந்து இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய கச்சேரி அமைந்துள்ள லெமனன் வீதி பகுதியில் 25 அடி உயர மண்மேடு சரிந்து விழுந்த நிலையில் மண்ணுக்குள் புதையுண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை 04 மணியளவில் இடம் பெற்றுள்ள இந்த அனர்த்தத்தில் மரான்கொட மஸ்தெக எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த பி.எம்.சி.ருக்ஷானா (வயது 21) மற்றும் கே.நிலந்த (வயது 42) ஆகிய இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா வெடமன் வீதி இலக்கம் 7/2 என்ற முகவரியில் வசிக்கும் ரஞ்சித் பிரியந்த வீரசிங்க என்பவர் தனது விட்டுக்கு பின் பகுதியில் மண்மேடு ஒன்றை அகற்றி அங்கு விடுதி ஒன்றை அமைக்கும் பணியை ஆரம்பித்துள்ளார்.

இதன்போது விடுதி அமைக்கும் பகுதியில் 25 அடி உயரமான பாதுகாப்பு மதில் ஒன்றை அமைக்க மண்மேடை அகற்றும் பணியில் ஒன்பது பேர் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்த நிலையில் அகற்றப்பட்ட மண்மேடு சம்பவத்தில் உயிரிழந்த இருவர் மீது சரிந்து விழுந்து குறித்த இருவரும் மண்ணில் புதையுண்டுள்ளனர்.

அவர்களை மீட்கும் பணியில் ஏனைய தொழிலாளர்களும், அப்பகுதி வாசிகளும் ஈடுப்பட்டுள்ளனர். சுமார் ஒன்றரை மணிநேரம் மண் அகற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதையுண்ட இருவரையும் சடலமாக மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட இருவரின் உடல்களும் பிரேத பரிசோதணைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இந்த சம்பவம் குறித்த விசாரணைகளை நுவரெலியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி