ஐரோப்பா

ரஷ்யாவின் ஆயுத உற்பத்தி ஆலை மீது உக்ரைன் ஏவுகணை தாக்குதல்

ரஷ்யாவின் வோல்கோகிராட் பகுதியில், பீரங்கி அமைப்புகள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்களுக்கான பாகங்களைத் தயாரிக்கும் ஆலை மீது நேற்றிரவு உக்ரைன் தாக்குதல் நடத்தியதாக அந்நாட்டின் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலுக்கு உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ஃபிளமிங்கோ ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்தத் தாக்குதல்களால் டைட்டன்-பரிக்காடி ஆலையின் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும்  ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவின் விளாடிமிர் பகுதியில் உள்ள “வ்டோரோவோ” எண்ணெய் இறைக்கும் நிலையம் மீதும் உக்ரைன் தொடர் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.

இந்நிலையமானது ரஷ்ய உள்நாட்டு நுகர்வோருக்கு பெட்ரோலியப் பொருட்களை அனுப்புவதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய தளவாட மையமாக உள்ளது.

உக்ரைனின் தொடர் தாக்குதல்கள் பற்றி கருத்து வெளியிட்ட  ஜெலென்ஸ்கி, நாள்தோறும் நாம் கொடுக்கும் அழுத்தம்தான், இறுதியில் ஒரு கண்ணியமான அமைதிக்கான அடித்தளத்தை அமைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்..

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்