உலகம்

பெய்ரூட்டில் இரண்டாவது நாளாக தொடரும் தாக்குதல்!

இஸ்ரேலிய இராணுவம் தெற்கு பெய்ரூட்டில் இன்று புதிய தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டதாக லெபனானின் உத்தியோகபூர்வ தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

பெய்ரூட்டில் உள்ள ஹெஸ்பொல்லா கட்டளை மையத்தை குறிவைத்து முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலியப் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா நடத்திய துப்பாக்கிச் சூட்டிற்குப் பதிலடியாக, இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தாக்குதல்களுக்கு முன்னதாக, “பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கான” நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக IDF குறிப்பிட்டுள்ளது.

மேலும் ஹிஸ்புல்லா அமைப்பின் இரண்டு எறிகணைகள் இஸ்ரேலில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் விழுந்ததாகவும் IDF தகவல் வெளியிட்டுள்ளது.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்