டெக்சாஸில் துப்பாக்கிச்சூடு -10 பேர் படுகாயம்!!
டெக்சாஸின் மிட்லாண்ட் நகரில் இன்று துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இதில் குறைந்தது ஒருவர் உயிரிழந்ததோடு, மேலும் பத்து பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கட்டிடம் ஒன்றுக்குள் பதுங்கியிருந்த நிலையில் இந்த தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார், பாதுகாப்பு வளையத்தை அமைத்து, விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரம் பொதுமக்கள் அந்த பகுதியை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





