மீண்டும் பரபரப்பு! ட்ரம்பின் கருத்துக்கு ஈரான் பதிலடி!!
அமெரிக்காவுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்று ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும், விரைவில் ஒரு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று வியாழக்கிழமையன்று டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் பேச்சுவார்த்தையாளர்கள் ஈரானுடன் ஒரு சிறந்த சமரசத்தை எட்டியுள்ளதால், அந்தத் தாக்குதல்களை ரத்து செய்வதாக அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ட்ரம்ப்,
“அடுத்த சில நாட்களில் ஒப்பந்தம் இறுதி வடிவத்தைப்பெறும். அநேகமாக ஐரோப்பாவில் இதற்கான கையெழுத்து விழா நடைபெறும்.” என்று கூறினார்.
ஆனால், ஒப்பந்தம் குறித்த செய்திகள் ஊகங்கள் என்றும், “எதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை” என்றும் ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் Esmail Baghaei தெரிவித்துள்ளார்.
ஈரானுடனான ஒப்பந்தம் நெருங்கிவிட்டது என்று டிரம்ப் இதற்கு முன்பும் பலமுறை உரிமை கோரியுள்ளார், ஆனால் அப்போது ஒப்பந்தம் எதுவும் நடைமுறைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





