மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதல் – 06 பேர் கைது!
மெல்பேர்ன் ரயில் நிலையத்தில் வாள் வெட்டு தாக்குதலில் ஈடுபட்ட 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஃபிளிண்டர்ஸ் ஸ்ட்ரீட் (Flinders Street Station) ரயில் நிலையத்தில் நேற்று இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
இந்த வன்முறை மோதலில் சுமார் 10 பேர் ஈடுபட்ட நிலையில், அவர்களில் 06 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
17 வயது சிறுவன் ஒருவனுக்கு கையில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டதாகவும், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதேநேரம் 22 வயது இளைஞர் ஒருவர் மீது கலவரம், கவனக்குறைவாகக் காயம் ஏற்படுத்துதல், ஆயுதத்தால் தாக்குதல் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதத்தை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இந்தச் சம்பவம் விக்டோரியாவின் அரிவாள் தடைச் சட்டம் குறித்த விவாதத்தை மீண்டும் தூண்டியுள்ளது.




