பிஜி தீவில் நிலநடுக்கம்!
தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துள்ள பிஜி தீவில் இன்று 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 506.6 கி.மீ. தொலைவில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
பசுபிக் நெருப்பு வளைய பகுதியில் பிஜி தீவுகள் அமைந்துள்ளமையால் அப்பகுதியில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது சாதாரணமான ஒரு விடயமாகும்.




