ஐரோப்பா

நேரில் சந்திக்க ஜெலன்ஸ்கி அழைப்பு : புட்டின் நிராகரிப்பு!

ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து கடிதம் ஒன்றை எழுதியுள்ள நிலையில், அவரின் அழைப்பை புட்டின் நிராகரித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்ட தனது கடிதத்தில், பெரும்பாலான ரஷ்யர்கள் உக்ரைனின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள், அதிக பணவீக்கம் மற்றும் எரிபொருள் பற்றாக்குறையால் சோர்வடைந்துவிட்டதாகவும், அமைதிக்குத் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி கூறியிருந்தார்.

மேலும், போரைத் தொடர்வது புதினின் சொந்த நிலைக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்றும், ரஷ்யா சோர்வடையும்போது மாற்றம் பின்தொடரும் என்பதை வரலாறு காட்டியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள புட்டின், அந்தக் கடிதம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஒரு நேர்மையான முன்மொழிவாகத் தோன்றவில்லை என்று தெரிவித்துள்ளார்.

“இந்தக் கடிதத்தில் சில மிகவும் முரட்டுத்தனமான கருத்துக்கள் உள்ளன. இது நேருக்கு நேர் சந்திப்பிற்கான சூழலை உருவாக்குவதற்கான ஒரு வழியா அல்லது அத்தகைய சந்திப்பை ஏற்பாடு செய்யாமல் இருப்பதற்கான ஒரு வழியா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்