capital attack கலவரத்துடன் தொடர்புடையவருக்கு பென்டகனில் உயர் பதவி!!
ஜனவரி 6 கலவரத்தில் (capital attack) தண்டனை பெற்றவரான எலியாஸ் இரிசாரி (Elias Irizarry) பென்டகனில் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனவரி 6, 2021 அன்று நடந்த கிளர்ச்சியின் போது, உடைந்த ஜன்னல் வழியாக ஒரு உலோகக் கம்பியைப் பயன்படுத்தி அமெரிக்க கேபிட்டலுக்குள் நுழைந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரிசாரி, தனது குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தார்.
இதனையடுத்து தண்டனைக்கு உட்பட்டிருந்த அவர், ட்ரம்பின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பணயக்கைதிகள் மீட்பு போன்ற பணிகளைக் கையாளும் முக்கியப் பதவிக்கு அவரை ட்ரம்ப் நிர்வாகம் நியமித்துள்ளது.
இந்த நியமனம் உள்வட்டாரத்தினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் பென்டகன் இந்த நியமனத்தை நியாயப்படுத்தி, இரிசாரியை “தகுதிவாய்ந்த, தேசபக்தியுள்ள இளம் நிபுணர்” என்று வாதிடுகிறது.





