கென்யாவில் மக்கள் போராட்டம் : இருவர் மீது துப்பாக்கிச்சூடு!
கென்யாவில் எபோலா தனிமைப்படுதல் கூடாரங்களை அமைக்க அமெரிக்கா தயாராகி வருகின்ற நிலையில் இதற்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய கென்யாவின் நன்யூகி (Nanyuki) நகரில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இறந்தவர்களில் ஒருவர், “தனது வியாபாரத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது” சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கிச்சூடு தொடர்பில் அதிகாரிகள் எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.
இதேவேளை நேற்றைய தினம் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் நகரின் தெருக்களில் பேரணியாகச் சென்று, சாலைகளை மறித்து, டயர்களை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்புகைக்குண்டுகளையும் பயன்படுத்தியிருந்தனர்.
கென்யாவில் எபோலா சிகிச்சை மையத்தை நிறுவுவதற்கான அமெரிக்காவின் திட்டம், எல்லை தாண்டிய தொற்று அபாயங்கள் குறித்து பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் தெருக்களில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




