வங்கதேசத்தில் 06 சிசுக்களின் மரணம் தொடர்பில் விசாரணை வேட்டை!
வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் பிறந்து 03 நாட்களே ஆன 06 பச்சிளங் குழந்தைகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வங்கதேசத்தில் தற்போது கடும் வெப்பநிலை நிலவி வருகிறது. இந்நிலையில் பிரசவத்திற்குப் பிந்தைய பராமரிப்புப் பிரிவில் குளிரூட்டி பழுதடைந்ததாக கூறப்படுகிறது.
மிதமிஞ்சிய வெப்பநிலையே குழந்தைகள் உயிரிழந்தமைக்கு காரணம் என மருத்துவ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், பச்சிளம் குழந்தைகளின் இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய எங்களுக்குச் சிறிது அவகாசம் தேவை, என்றும் மருத்துவமனையின் இயக்குநர்களில் ஒருவரான நஹிதா யாஸ்மின் கூறியுள்ளார்.
இதற்கிடையே தற்போது வரை நடைபெற்ற விசாரணைகளில் முறையற்ற அல்லது தவறாக சிகிச்சையளிக்கப்படமைக்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





