ஜப்பானில் அதிகரிக்கும் கரடி தாக்குதல்கள் : ஓநாய் ரோபோக்களுக்கு பெருகும் ஆதரவு!
ஜப்பானில் கரடிகளை விரட்டியடிக்க ரோபோக்களை பயன்படுத்த ஆதரவு பெருகி வருகிறது.
இதற்கமைய காட்டு விலங்குகளை விரட்டுவதற்காக அனிமேட்ரானிக் ஓநாய்களை (animatronic wolves) ஓட்டா செய்கி நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது அந்த நிறுவனத்திற்கு இந்த வருடத்தின் இதுவரையான காலத்தில் மாத்திரம் 50 ஆர்டர்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
இந்நிலையில் அந்த சாதனத்தை விரைவாக வழங்குவதற்கு முடியாமல் திணறுவுதாக அந்நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் அவற்றை கையால் உருவாக்குகிறோம். எங்களால் இப்போது அவற்றை போதுமான வேகத்தில் உருவாக்க முடியவில்லை. எங்கள் வாடிக்கையாளர்களை இரண்டு முதல் மூன்று மாதங்கள் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று நிறுவனத்தின் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
2025-2026-ஆம் ஆண்டில், 13 கரடித் தாக்குதல்கள் பதிவாகியுள்ளதுடன் பலர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ரோபோ ஓநாய்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.




