இலங்கை செய்தி

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு

அமைதிக்கான நடைப்பயணம் நிறைவு விழாவில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க  ஜய ஸ்ரீ மகா போதி மரக்கன்றை உத்தியோகபூர்வமாக வழங்கினார்.

வன்முறையற்ற சூழல், கருணை, மற்றும் மக்களிடையே நல்லிணக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக்  கொண்டு இந்த நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த பாத யாத்திரை கடந்த ஏப்ரல் 21 அன்று அனுராதபுரத்தில் ஆரம்பமாகி, தம்புள்ளை,  மாத்தளை, கண்டி, கேகாலை, யக்கலை மற்றும் களனி ஆகிய நகரங்கள் வழியாக சுமார் 07 நாட்கள் பயணித்து

கொழும்பு சுதந்திர சதுக்கத்தை இன்று வந்தடைந்தது.

அரச விழாவாக நடைபெற்ற நிறைவு விழாவில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க,

புனித ஜய ஸ்ரீ மகா போதியிலிருந்து பெறப்பட்ட போதி மரக்கன்றை, வியட்நாமைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய

பன்னாகார தேரர் தலைமையிலான அமெரிக்காவிலிருந்து வருகை தந்த பிக்குகளின் குழுவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்ற அரச விழாவில், ஜய ஸ்ரீ மகா போதியின் போதி மரக்கன்றினை

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய பஞ்ஞாகர தேரரிடம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கையளித்ததைத்

தொடர்ந்து இந்நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை