சரிகமபவில் அதிரடி: இருவர் வெளியேற்றம்
சரிகமப நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த வாரம் அதிரடியாக இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இந்த வாரம் ‘One On One’ சுற்று மிகவும் சுவாரஸ்யமாக நடைபெற்றது. இரண்டு போட்டியாளர்களாக ஜோடி சேர்ந்து நேருக்கு நேர் மோதி தனது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஜூன் 07 சரிகமபவின் பிரம்மாண்ட இறுதிச்சுற்று நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நேற்றைய நிகழ்ச்சியில் இருந்து கனிஸ்க் (kanishk) மற்றும் இனியவன் இருவரும் ஜோடியாக வெளியேற்றப்பட்டனர்.
யாரும் எதிர்ப்பாராத இந்த திருப்பம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.
இதேவேளை, கடந்த வாரம் தனது முழு திறமையையும் வெளிப்படுத்த முடியாமல் கலங்கி நின்ற இலங்கை வர்ஜா, அதிரடியாக இறுதி 10 போட்டியாளர்களுக்குள் இடம்பிடித்துள்ளார்.
அவருக்கு இலங்கை ரசிகர்கள் மற்றும் இல்லை உலக வாழ் சரிகமப ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகின்றன.
இனி வரும் காலங்களில் போட்டி இன்னும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுவதுடன், இன்னும் பல திருப்பங்களை எதிர்ப்பார்க்கலாம்.






