துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இராப்போசன விருந்து இரத்து!
வெள்ளை மாளிகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவானதை தொடர்ந்து இரவு நேர விருந்து நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளது.
இரகசிய சேவை அதிகாரி மீது மேற்படி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றதுடன், தற்போது அந்த அதிகாரி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் கலிபோர்னியாவின் டொரன்ஸைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன்முறைக் குற்றத்தின் போது துப்பாக்கியைப் பயன்படுத்தியது மற்றும் ஒரு கூட்டாட்சி அதிகாரியைத் தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
தாக்குதலுக்கான காரணத்தை கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





