இலங்கை செய்தி

யாழில் தந்தை செல்வாவின் சமாதியில் மலர் தூவி அஞ்சலி 

தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வ இன்று ஞாயிற்றுக்கிழமை காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தின் மத்தியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் ஆயர் சு.ஜெபநேசன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

முதலில் சதுக்கத்தில் உள்ள அவருடைய திருவுருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன், அவரின் சமாதியிலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு அவருக்கான அஞ்சலிகளை செலுத்தினர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!