RCB அணி வெற்றிநடை!
IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 34ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீசியது.
20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ஓட்டங்களை குஜராத் டைட்டன்ஸ் அணி பெற்றது.
புpன்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது. ஜேக்கப் பெத்தல் 14 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்கு விராட் கோஹ்லியும், தேவ்தத் படிக்கலும் இணைந்து 115 ஓட்டங்களைப் பெற்றனர்.
விராட் கோஹ்லி, 44 பந்துகளில் 81 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அவரது இன்னிங்ஸில் 8 பவுண்டரி, 4 சிக்ஸர்களை பதிவு செய்தார்.
குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் க்ருணால் பாண்டியா அதிரடியாக ஆடி ரன் சேர்த்தார். 12 பந்துகளில் 23 ரன்களை அவர் விளாசினார். இதன் மூலம் 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்து ஆர்சிபி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் இரண்டாவது ஆர்சிபி முன்னேறியுள்ளது.





