உலகம் செய்தி

இஸ்ரேல், லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஒப்பந்தம் ?

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமைதி ஏற்படுத்தும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக வெளியிடப்பட்ட காணொளிப் பதிவில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஆனால், இந்த முயற்சிகளை ஹிஸ்புல்லா சீர்குலைக்க முயற்சிப்பது தெளிவாக இருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) மற்றும் ஹிஸ்புல்லா இரண்டும், போர் நிறுத்த ஒப்பந்த மீறல்களுக்கு ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றன.

வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இஸ்ரேல் தாக்குதல்கள் நடத்தியதாகவும் நெதன்யாகு கூறினார். மேலும், எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் எதிராக முழுமையான நடவடிக்கை சுதந்திரம் இஸ்ரேலுக்கு உள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இஸ்ரேல் மத்திய கிழக்கின் நிலையை மாற்றி வருவதாகவும், அமெரிக்காவுடன் முழுமையான ஒத்துழைப்பில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஈரானுக்கு எதிராக பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக கடுமையான அழுத்தம் கொடுத்ததற்காக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பையும் நெதன்யாகு பாராட்டினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!