மத்திய கிழக்கில் இரட்டை போர் நிறுத்தம் – தற்காலிக அமைதி
மத்திய கிழக்கில் தற்போது இரண்டு பகுதிகளில் போர் நிறுத்தம் அமுலில் உள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயும், மற்றொன்று இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேயும் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இரண்டு வார போர் நிறுத்தம் புதன்கிழமை நிறைவடையவுள்ளது. இதனிடையே, ஓமான் வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை அமெரிக்க கடற்படை கைப்பற்றிய சம்பவம் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை போர் நிறுத்த மீறல் என ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது.
இதேவேளை, இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையேய போர் நிறுத்தம் ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது. இந்த போர் நிறுத்தம் 10 நாட்கள் நீடிக்கும்.
இரு தரப்பும் நேரடி பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், ஹிஸ்புல்லா உள்ளிட்ட ஆயுதக் குழுக்கள் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க லெபனான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹிஸ்புல்லா அமைப்பும் பேச்சுவார்த்தையில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளது. ஆனால், அதில் இஸ்ரேல் படைகளின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.





