உலகம்

நேட்டோ கூட்டணி பயனற்றது – ட்ரம்ப் கருத்து!

நேட்டோ கூட்டணி பயனற்றது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது ட்ரூத் சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரம் இப்போது முடிந்துவிட்டதால், எங்களுக்கு ஏதேனும் உதவி தேவையா என்று கேட்டு நேட்டோவிடமிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘பயனற்ற’ நேட்டோ ‘விலகி இருக்க வேண்டும் என்றும் அவர்கள் ‘தங்கள் கப்பல்களில் எண்ணெயை ஏற்ற மட்டுமே விரும்புகிறார்கள்’ எனவும் ட்ரம்ப் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய நாட்களில் ட்ரம்பின் கருத்துக்கள் நேட்டோ கூட்டணியில் இருந்து அமெரிக்கா விலகுவதற்கான அதிக வாய்ப்புகளை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானை கட்டுப்படுத்த நேட்டோ ஒத்துழைப்பு வழங்க மறுத்ததை தொடர்ந்து ட்ரம்பின் விமர்சனங்கள் வந்துள்ளன.

VD

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!