ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது: ஈரான் உறுதியென ட்ரம்ப் அறிவிப்பு!
ஹார்முஸ் நீரிணை இனி ஒருபோதும் மூடப்படமாட்டாது என ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கடல்வழிப் பாதையை ஒரு ஆயுதமாக பயன்படுத்த மாட்டோம் என்று ஈரான் உறுதியளித்துள்ளதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மீள திறக்கப்படும் என ஈரான் இன்று அறிவித்தது.
ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் போர் நிறுத்தம் அமுலில் உள்ள காலப்பகுதிக்கு மட்டுமே இது பொருந்தும் என ஈரான் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த கால எல்லை எதிர்வரும் 22 ஆம் திகதியுடன் நிறைவுபெறுகின்றது.
இந்நிலையிலேயே ஹார்முஸ் நீரிணை இனி மூடப்படமாட்டாது என்ற விடயத்தை ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.





