செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் சிலிண்டர் விலை மேலும் உயரும் – மக்கள் அதிருப்தி

தமிழ்நாட்டில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை மேலும் 200 ரூபாய் வரை உயரக்கூடும் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கணித்துள்ளார்.

மேலும், வணிக சிலிண்டர் விலையும் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக, விலைவாசி உயர்வை தவிர்க்க முடியாது என்றும் ஆனந்த் சீனிவாசன் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தமிழ்நாட்டில் 03 வாரங்களுக்குத் தேவையான வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பில் உள்ளதாக உணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் சமையல் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்களுடன் தலைமைச் செயலாளர் முருகானந்தம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதன்போது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து இன்று மதியத்திற்குள் தகவல் தெரிவிக்கும்படி எண்ணெய் நிறுவனங்களுக்கு தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிவுறுத்தினார்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!