மத்திய கிழக்கு வெளிவிவகார அமைச்சர்களுடன் விஜித மந்திராலோசனை!
மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள வெளிவிவகார அமைச்சர்களுடன், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அவசர கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.
தொலைபேசி ஊடாகவே மேற்படி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கட்டார், லெபனான், ஜோர்தான் மற்றும் குவைத் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனேயே அவர் கலந்துரையாடியுள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலினால் மேற்படி நாடுகள் எதிர்நோக்கியுள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர், அதற்காகத் தனது ஆழ்ந்த வருத்தத்தையும் அனுதாபத்தையும் தெரிவித்தார்.
மேற்படி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் அமைச்சர் இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.
குறித்த நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.





